தமிழ் மொழியின் சிறப்பு

உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே

மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்து தவழும்
தூய மழலை தேன் மொழியே

இலக்கண செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே

மும்மை சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே

இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்

எழுதியவர் : (30-Nov-17, 4:01 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4858

மேலே