சமையலறை ஜன்னல் பக்கம் வந்த காகம்
அடுக்களை ஜன்னல் திறந்தேன்
பின்னாலிருந்த மரத்திலிருந்து
காகம் ஒன்று வந்தமர்ந்தது
ஜன்னல் பக்கம் -அங்கு நான்
காகத்திற்கு ரொட்டி துண்டுகள்
சில சிதறவைத்தேன் -இப்போது
அதைக் கண்ட அந்த காகம்
'கா' கா' என்று கரைந்தது தன
கூட்டத்தாருக்கு அறைகூவல் அது
தனக்கிட்ட உணவை மற்ற
காகங்களுடன் பகிர்ந்துண்ண
சிந்திக்க வைத்தது காகம்
ஆறறிவு படைத்த மனிதனுக்கு
இந்த பரந்த குணம் இன்னும்
வராததேனோ-மனிதன்
பரிணாம வளர்ச்சியில் இது
பிற்போக்கா ?,பின்தங்கலா? இல்லை அந்த
பறவையை பார்த்து மனிதன்
கற்றுக் கொள்வானோ பார்க்கலாம்
என்று வேடிக்கைப் பார்க்க
படைத்தவன் விட்டுவிட்டானோ?