தனிமை வேண்டாம்
தனிமையில் வாழத் தோன்றிடும்
எண்ணம்
விழிகளில் உணர்வினை இழப்பதைப் போன்றது
நம் உணர்வுகள் அனைத்தும் இருளிலே புதைந்து
வாழ்விலே இனிமைகள்
அகன்றுவிடும்
மனிதம் மடிவதும் வெறுப்பை
உமிழ்வதும்
தனிமை வாழ்வில்
நிகழ்வது
உணர்ந்தும் வாழ்விலே தனிமை
தொடர்ந்தால்
நம் குணங்கள் யாவும்
சிதைபடும்
இணைந்து வாழ விரும்பும்
போது
உதவும் எண்ணம் பிறக்குது
பிரிவை நோக்கி நகரும்
போதே
பகிரும் எண்ணம் மறையுது
வெற்றியைத் தனிமையில் சுவைக்கும் உள்ளமும்
தோல்வி என்றதும் தோழமைத் தேடுதே
இதனை நாமும் உணர்ந்துகொண்டால்
வாழ்விலே தனிமை அகன்று
வாழ்ந்திடலாம்

