காலமெல்லாம் காத்திருப்பேன்

நீ செல்லும் இடமெல்லாம் உன் நிழலாய் நானிருப்பேன் ..
நிம்மதியாய் நீ உறங்கிடவே நிலவாக விழித்திருப்பேன்
மல்லிகையாய் வாழ்ந்திடுவேன் மங்கை உன் கூந்தலிலே!
தென்றலாய்த் தவழ்ந்திடுவேன் தினம் உன்னை வருடிடவே ..
உன் விழிகள் தீண்டிய நாள்முதலே ..
உனக்காகவே நான் வாழ்கின்றேன் !
உன் மார்பில் துஞ்சும் சங்கிலியாய் காலில் சிணுங்கும் ..
கொலுசுகளாய் உன்னுடனே நான் வாழ்ந்திருப்பேன் !
என் கண்ணில் உன்னை வைத்திருந்து !
காலமெல்லாம் காத்திருப்பேன் ..
கண்மணியே உன் கை பிடிக்க !!!

எழுதியவர் : Niranmani (30-Nov-17, 8:33 pm)
பார்வை : 1262

மேலே