பிள்ளை பாட்டு
உன் உடலோடு உயிராக பத்து மாசம் சுமந்தாயே !!
பிறந்தபின்னே உன்னைவிட்டு , நான் வேறாய் பிரிந்தாலும்
அதை அறிந்திட இன்னும் பலகலயே !!!
என்னைவிட்டு அப்பப்ப எங்க நீயும் தொலஞ்சி போற?
நான் பாக்குற பொமையெல்லாம்
பழகிடத்தான் கிடைச்சிடுது ,
வாய்விட்டு கேட்டிடும் முன்னதுவே
என் தேவையெல்லாம் முடிஞ்சிடுது ,
ஒண்ணுமட்டும் நடக்கலையே !!
என் முதல் கனவு இன்னும் பலிக்கலையே !!!
உன் கைய பிடிச்சி விளையாடி ,
எனக்கு நீயும் சோறூட்டி
நல்ல பல பழக்கங்களை கதையாக நீ சொல்ல
கேட்டு நானும் உறங்கிடவே
கணுவும் நானும் கண்டனே !!!
யாருக்காக உழைத்திடவே ,
நீயும் விரைந்து விரைந்து ஓடுகிறாய் ?
விடுமுறை தினத்தினிலும்
சோர்வுடனே வாடுகிறாய் !!
ஆயிரம் ரூபாயும் செல்லாமல் நாளை போகும்
அரை நொடி என்றால் கூட உன் அன்பு
நாளை பலகோடியாக வந்து சேரும் !!
சொத்து சுகம் எல்லாமே பிழைப்பதற்கு மட்டும்தானே
நான் அன்புக்கொண்டு வாழ்வதற்கு
எனக்கு தேவ , உன் அரவணைப்பு மட்டும் தானே !!!!
- திவ்யா சத்யப்ரகாஷ்
செம்பாக்கம், சென்னை

