குறுநகை குறுந்தொகை விருந்து
குறுநகை குறுந்தொகை விருந்து
குழியும் கன்னங்கள் மோகத்தின் அழைப்பு
விரியும் விழிகள் கம்பன் காவிய விருந்து
கவியும் போது அந்தி மாலையின் அழகு
பார்க்கும் விழிகள் பாலைவன பசுஞ்சோலை
தோற்கும் அவள் அழகில் வானத்து நிலவு
கலைந்தாடும் கூந்தல் கார்முகில் போர்வை
கண்களிரண்டும் பொழியும் வானத்து அமுதை
பொழிவாளா அமுதை குறுநகையாள்
பொழிந்தால் அது என் காதல் நெஞ்சுக்கு விருந்து !