சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 31 அபராத முல நோர்வ – ரஸாளி
'ரஸாளி' என்ற ராகத்தில் அமைந்த 'அபராத முல நோர்வ' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.
முன்னுரை:
கரும்பை சிறப்பிக்கும் ராகம் ரஸாளி. ரஸம் என்னும் சாறு உள்ளதால் தெலுங்கில் கரும்பை 'ரஸாளமு' என்பர். கரும்பின் சாற்றைப் போல, கேட்பவர்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் ராகம் 'ரஸாளி' யாகும். ஆண்ராகமான ரஸாளி எல்லா வகை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் காலை நேர ராகம்.
பொருளுரை:
கனத்த என் அபராதங்களைப் பொறுத்தருள இதுவே தருணம். கிருபையுடன் என்னை நோக்கு.
சபலம் நிறைந்த உள்ளத்துடன், என் மனத்தை நானே அறியாமல், துயரமறிந்து முறையிடும் என் குற்றங்களைப் பொறுத்தருள்.
சகல லோகத்திலும் உள்ள ஜீவகோடிகளின் வினைப்பயன்களை அறிந்து நீ அவர்களைக் காப்பதுபோல் என்னையும் பாலித்தருள்வாய் என்று அறிந்து உன்மீது கீர்த்தனைத் தொகுதியைப் பாடிய தியாகராஜனின் பிழைகளைப் பொறுத்தருள்.
பாடல்
பல்லவி:
அபராத முல நோர்வ ஸமயமு
க்ருப ஜூடு க நமைந நா (ய)
அனுபல்லவி:
சபலசித்துடை மநஸெறுககநே
ஜாலி கலுகஜேஸுகொநி மொரலநிடே (அ)
சரணம்:
ஸகலலோகுல ப லாப லமு லெறிகி
ஸம்ரக்ஷிஞ்சுசு நுண்டக நந்-
நொகநி ப்ரோவ தெலியநு கீர்த்தந ச-
தக மொநர்ச்சுகொந்ந த்யாகராஜுநி (அ)
Neha Nataraj's Debut Concert: aparAdha mulanOrva என்று வலைத்தளத்தில் பதிவு செய்து, நேஹா நடராஜ் அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்திற்கு அருகிலுள்ள Eastern University அரங்கில் இப்பாடலை பிரமாதமாகப் பாடியதைக் கேட்கலாம்.
Thyagaraja Kriti-aparAdhamula--rasALi--Adi என்று வலைத்தளத்தில் பதிவு செய்து, மதுரை மணி ஐயர் பாடியதைக் கேட்கலாம்.
aparAdha mulanOrva என்று யு ட்யூபில் பதிவு செய்து, மதுரை சேஷகோபாலன் மற்றும் வெவ்வேறு பாடகர்கள் பாடியதைக் கேட்கலாம்.
Aparadhamula Norva - Rasali - Smt.Jayanthi Kumaresh என்று வலைத்தளத்தில் பதிவு செய்து, திருமதி ஜெயந்தி குமரேஷ் வீணையில் இப்பாடலை வாசிப்பதைக் கேட்கலாம்.

