திருமண தின வாழ்த்து

தோழியே தோழனே
நெடுநாள் வாழி
அன்பு என்றும் நிறைந்திட்டு வாழி
புரிதல் கொண்டு வாழி
உன் மணவாளன் உன் கழுத்தில் தாலி அணிவிக்க வெட்கி தலைகுனிந்து ஏற்றாய் தோழி
அப்பொழுது கொண்ட இன்பம்
என்றும் பெற்று இன்பமாய் நெடுநாள் வாழி தோழி
அனைத்து செல்வங்களும் பெற்று
வாழி தோழி
உள்ளார்ந்த உண்மையான நேசம் கொண்டு பொய்மை அற்று வாழி
தோழியே
என்றும் சிறப்புடன் வாழியவே என் தோழியே
திருமண தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : (2-Dec-17, 3:57 pm)
பார்வை : 762

மேலே