தென்றல்

இது என் சொந்த கதை அல்ல,,
என் பேராசிரியரின் எழுத்து வடிவம்,,,,
அந்த நாள் ஜெம்ஸ்போர்ட் என்ற பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது! பள்ளியின் முதல்வர் , தாளாளர் அனைவரும் உரையாடிக்கொண்டிருக்க,, விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் ஐவர் மட்டும் பள்ளியை சுற்றி பார்த்துவிட்டு வர கிளம்பினார்கள்,, ஐவரும் பொறியியல் துறையில் சிறந்த வல்லுநர்கள்,, அப்பள்ளியின் விழா மைதானத்தை கடக்கும்போது அதிலிருந்து ஒருவர் மட்டும் அங்கு சென்று , அங்கிருந்த ஒரு ஓவியத்தை கண்டு கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்,,,,, மற்ற மூவரும் அவரை சமாதான படுத்தி கொண்டிருந்தனர்,,
யார் அவர்கள், அந்த ஓவியம் யாருடையது என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களின் வாழ்க்கையின் முற்பகுதியை நாம்தெரிந்து கொள்ள வேண்டும்,,,
சுமார் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மேல்நிலை பள்ளியில் இருந்து ஒரு மாணவிக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்படுகிறது ,, அவளால் அதை ஏற்க முடியவில்லை,, அதனால் எதட்காகவும் கவலை படாத அந்த மாணவி தேம்பி தேம்பி அழுகிறாள், தன்னை பாசமாய் வளர்த்த தன தகப்பன் முன்னிலையில் ,, காரணம் அவள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு டய்ப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அவளால் தேர்வு எழுத முடியாது என முடிவு செய்த அப்பள்ளி நிர்வாகம் அவளுக்கு மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு இடைநீக்கம் செய்தது,,,

யார் அந்த பெண் ,, அவள் பெயர் தென்றல், அவளின் குணமும் அவளின் பெயருக்கு ஏற்றார் போலவே தென்றலாய் இருந்ததால் அனைவரும் அவளை விரும்பினர், அதோடு மட்டுமல்லாமல் அவளின் மிக மோசமான பேரழகை கண்டோர் மறுமுறை அவளை கட்டாயம் திரும்பி பார்ப்பர்,, அவளுக்கு அருமையான பெற்றோர், தன்னை தாயாய் பாவிக்கும் தன்தங்கை என அழகிய குடும்பம் இருந்தது,,,

பள்ளியை விட்டு இடை நீக்கம் செய்ததால், தந்தை அவளை தனியார் கல்வி முறையில் அதாவது டுடோரியல் பள்ளியில் சேர்த்து விட்டார், அங்கு அவளுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது,, அவள் அறிவியல் பிரிவு மாணவி ஆனால் அவளுக்கு அங்கு கிடைத்த பிரிவு கணக்கு பதிவியல் ,,, மூன்றே மாதங்கள் ,படித்திராத புது பிரிவு இரண்டையும் அவள் சமாளித்து தேர்வில் அனைவரும் ஆச்சர்ய படுமளவில் தேர்ச்சியும் பெற்றாள்...,
அடுத்து தன் உயர்கல்வி தனக்கு அருகில் அணைத்து கல்லூரிகளுக்கும் அவள் விண்ணப்பம் அனுப்பினாள், அதில் ஒரு கல்லூரியில் அவள் இளங்கலை ஆங்கிலம் படிப்பதற்காக சேர்த்து கொள்ளப்பட்டாள்,,

முதல் நாள் கல்லூரி , அங்கு சென்று தன் வகுப்பில் காலடி எடுத்து வைத்த அவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது,,,
என்ன அந்த அதிர்ச்சி,, அவளுக்கு சந்தோசம் தரக்கூடிய ஒன்றாஇல்லை மீண்டும் அவள் வாழ்வில் சோகமா ????
மீண்டும் சந்திக்கும்போது கூறுகிறேன் அதுவரையில் சிந்தியுங்கள்!!!!!!!!!!!

எழுதியவர் : என் ஆங்கில ஆசிரியர் (2-Dec-17, 8:57 am)
Tanglish : thendral
பார்வை : 131

மேலே