ரணகள அரண்யம்

கவினும் அவனது சகோதரி சுகாசினியும் மற்றும் அவர்களது தோழர்கள் தோழிகளும் வெளி நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் செல்வதாய் இரவு முழுதும் உறங்காமல் பக்கத்து வீட்டுக்காரனையும் உறங்க விடாமல் சப்தம் போட்டு ஆவலாவலாய் பேசிக்கொண்டிருந்தார்கள்

அதன் படி கவினும் அவனது சகோதரி சுகாசினியும் அவர்களின் தோழ தோழிகளும் ஒரு பழைய கடல் சூழ்ந்த புராதான நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர் ,,, அடுத்த நாள் காலையே புறப்பட ஆயத்தமாயிருந்தனர்

காலை சூரியன் தன் கண்களை விழிப்பதற்க்கு முன்பே எழுந்து குழித்து செல்ல தயாராகி விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி புறப்பட்டனர் ,,அந்த பழைய கடல் சூழ்ந்த புராதண தீவிற்குள் நுழைந்தனர்,,

தீவிற்குள் நுழைந்ததுமே அங்கு எதுவுமே சரியில்லாதது போல் தெரிந்தது,ஒவ்வொரு மனிதரும் விசித்திரமாய் இருந்தனர்

அங்கு இருக்கும் பெண்களும் குழந்தைகளும் கூட விசித்திரமாக இருந்தனர்,அந்த நேரத்தில் இந்தியாவில் இருக்கும் கவினின் மாமாவிறக்கு உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கைப்பேசியில் தகவல் வந்தது

அதே நேரம் அவர்கள் சென்றிருந்த இடத்தில் அவர்களுக்கு மிக வேண்டியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மருத்துவர்கள் ஆய்வு செய்து இது இயற்கை மரணம் தான் என்று முடிவு செய்தனர்

பிறகு அவருக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது இறுதி சடங்குக்குப்பின் கவின் நேரமாக அவர்கள் தங்கியிருந்த அரண்மனை இடத்திற்கு வந்துவிட்டான் அந்த நாடே புராதான நாடு என்பதால் அந்த நாடு முழுதும் அரண்மனைகள் தான் வீடுகளாக இருந்தன

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஏதோ தவறு ஒன்று நடந்தது கவின் மீது தவறுதலுக்கு இடம் இல்லாமலேயே குற்றம் சுமத்தப்பட்டு அவன் காவல் துறையிடம் மாட்டிக்கொண்டான்

இது எல்லாம் அந்த நாட்டிற்குள் சென்ற இரு நாழிகைக்குள் நடந்துவிட்டது,,

அந்த காவலர்களுக்கு எவ்வளவு எடுத்து கூறியும் அவர்களுக்கு விளங்கச்செய்ய முடியவில்லை அப்போது கவின் குற்றம்சாட்டப்பட்டு வேறொரு அரண்மை முன் கொண்டு செல்லப்பட்டு குற்றவாளியாக நிருத்தப்பட்டிருந்தான் அப்போது இந்தியாவில் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்ட கவினின் மாமா அந்த அரண்மனை வீதியில் தென்பட்டார் நன்றாக தெரிந்தது அது மாமாவின் முகமே தான் சந்தேகத்திற்கு இடமேயில்லை அது மாமாவே தான் இத்தனை பிரச்சணைகளாலும் மாலை நேரம் என்பதாலும் துக்கத்திலும் தூக்கமின்மையாலும் தன் கண்கள் பிழை செய்கிறதோ என்று எண்ணி கண்ணீர் படிந்த தன் கண்களை நன்றாக துடைத்து மீண்டும் உற்றுநோக்கினான்

இப்போது அதே இடத்தில் அதே உருவத்தில் அதே உடையில் மாமாவின் தோற்றத்தில் இருந்தவர் வேறு முகமாக தெரிந்தார் அனைத்தும் தன் பிரம்மையாக இருக்கும் என்று எண்ணிக கொண்டான்,

திடீரென்று யாரும் எதிரப்பாராத வகையில் அரண்மனைக்கு பின்னாலிருந்து பெரும் வெளிச்சத்துடன் மின்னல் வேகத்துடன் விசித்திரமான மிக பெரிய விமானம் ஒன்று வேகமாக பல அடி தூரம் பறந்து சென்று வானில் அப்படியே நின்றது ,,

உடனே அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர் காவல் துறை உட்பட ,

அது என்ன என்று கவின் முன்னே சென்று பார்க்க முற்ப்பட்ட போது உயரமான அந்த அரண்மனை முன்னிருந்து சந்தோஷ் தொப் பென்று கீழே விழுந்தான் பலத்த அடி வேறு

யோசிக்க நேரமில்லை அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது

அப்போது தான் நிலைமை சரியில்லை என்று தெரிந்தது வேகமாக ஓட ஆரம்பித்தான்

ஓட ஓட ஒவ்வொரு அரண்மனைக் கதவுகளும் வேகமாக சாத்தப்பட்டுக்கொண்டிருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் தஞ்சம் புக ஏதேனும் அரண்மனைக்குள் புக வழியிறுக்கிறதா என்று நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான்

அப்போது ஒரு மனிதன் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தான் இருள் என்பதால் அந்த மர்மமான மனிதன் கண்ணில் கவின் தென்படவில்லை இருளிலும் அந்த மர்ம மனிதனின் முகம் நனறாகத் தெரிந்தது அவனது கண்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் ஒளிர்வது போல் இருந்தது அவனது முகம் மனித தோற்றத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருந்தது அவன் பார்ப்பதற்கு மனித உடலிற்கும் முகத்திற்கும் அப்பாற்ப்பட்டு இருந்தான்

இத்தனைக்கும் நடுவிலும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தான் கவின்
திடீரென்று கருமேகங்கள் வானத்தை முழுவதுமாக சூழ்ந்து கொண்டது எங்கும் பயங்கர இருள் ஓடுவதை நிறுத்திவிட்டு சுற்றியுமுற்றியும் பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்

இத்தனை அபாயகரத்திற்கு நடுவில் அவனது சகோதரி அவனது நியாபகத்திற்கு வந்தாள்

சில நொடிகளில் சகோதரியின் நினைவுகள் கலைந்தது

தன் அருகில் யாரோ மெதுவாய் நடந்து வருவதை உணர்ந்தான் மெல்ல மெல்ல அந்த சப்தம் அவனை நெருங்கிக்கொண்டிருந்தது திடீரென்று தன் அருகில் யாரோ நிற்ப்பதை போன்றதொரு உணர்வு கவினின் இருதயத்துடிப்பு அதிகமானது

அவனது கண்களுக்கு அந்த மர்ம முகம் புலப்பட்டது ஆனால் அது கால்நொடி கூட நீடிக்கவில்லை , கண்களை பறிக்கும் அளவிற்கு சூரியனையே விழுங்கி விடும் அளவிறக்கு பெரும் வெளிச்சம் திடீரென்று வீசியது,அது அந்த தீவு முழுதும் பரவ ஆரம்பித்தது காதை பிய்த்து கொள்ளும் அளவிற்க்கு பெரும் சப்தம் கவின் அதை தாங்காதவனாக மண்டியிட்டு மெதுவாய் மண்ணில் வீழ்கிறான்


-க.விக்னேஷ்

எழுதியவர் : க.விக்னேஷ் (2-Dec-17, 3:58 pm)
பார்வை : 479

மேலே