பார்வதி பெரியம்மா

என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி. அதற்கு அடுத்தது முறையே என் சின்னம்மாக்கள் துர்காவும் பைரவியும் . என் தாத்தா சிவலிங்கம் தன் குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று ஏங்கியவருக்கு கொடுத்து வைக்கவில்லை . ஐந்தாவதாக எனக்கு ஒரு மாமன் பிறந்து ஒரு வருடம் கூட வாழவில்லை. அது என் தாத்தா குடும்பத்தை வெகுவாக பாதித்தது அது மட்டுமல்ல அதன் பின் என் பாட்டி லட்சுமி நோய்வாய் பட்டு படுத்தவள் தான் எழும்பவே இல்லை. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு என் பெரியம்மா தலையில் விழுந்தது. அவவுக்கு ஐம்பது வயதாகியும் திருமணமாகவில்லை. தலை இன்னும் நரைக்கவில்ல முகத்தில் சுருக்கு விழவில்லை . அவள் பார்வை குறையவில்லை. பேச்சு தழும்பவில்லை பார்வதி பெரியம்மமா இளமையில் வடிவானவளாக இருந்திருக்க வேண்டும். இப்பவும் காஞ்சிபுரம் சேலை உடுத்துக்கொண்டு கோவிலுக்கு போனால் பார்த்து விமர்சிக்காதவர்கள் இல்லை அவளின் கண்களும் முக வெட்டும் எடுத்துக் காட்டுது. இப்பவும் அவள் அழகி என்று. அவ்வை சண்முகி போல் இருப்பாள். அந்த படத்தைப் பார்த்து விட்டு வந்து எனக்கு என் பெரியம்மா தான் என் கண் முன்னே நின்றாள்.

பெரியம்மாவுக்கு எழுலை செவ்வாய் அதுதான் கலியாணப் பொருத்தங்கள் சரிவரவில்லை என்று என் லட்சுமி பாட்டி அடிக்கடி சொல்லுவாள். அந்த கிரகத்துக்கு இருக்க நல்ல வீடு கிடைக்க வில்லையா? இனி எங்கே அவளுக்கு திருமணம் நடக்கப் போகுது? என்று என் தாத்தா சப்புக்கொட்டிய மாதிரி பெரியம்மாவுக்கு திருமணம் நடக்கவில்லை. அவளது தலை எழுத்து குடும்பத்துக்கு உழைக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தது. அதோடு என் பெரியம்மா நணுக்கமும், துப்பரவும் பார்ப்பவள். நல்ல ஞாபக சக்தி உள்ளவள் .

****
என் அம்மா சிவகாமிக்கு நல்ல குரல் . பல சினிமா பாடல்கள் பாடி இருக்கிறாள். அவள் புகழின் உச்சியில் இருந்தபோது இசையமைப்பாளராக இருந்த என் அப்பா சிவராமை காதலித்து திருமணம் முடித்து அவர்களுக்கு பிறந்தவன் நான் ஒருவன் மட்டுமே . நான் பிறந்து சில வருடங்களில் கருத்து வேற்றுமையால் என் அப்பாவை அம்மா விவாகரத்து செய்தாள் . பெரியம்மா எவ்வளோவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.
என் சின்னம்மா துர்கா பத்து வயதில் போலியோ வந்து அவளுக்குவலது கால் ஊனம். அவள் அந்த குறையோடு வீணை வாசிப்பதில் கேட்டிக்காரி. பல இசைத்தட்டுகள் வெளியிட்டிருகிறாள் அழைப்புகள் வந்தால் இசைக் கச்சேரிக்கு போய் வீணை வாசிப்பாள் என் அம்மாவோடு சேர்ந்து இசை வகுப்புகள் நடத்துவாள். என் அம்மாவுக்கு வருடத்தில் சில நேரம் சினிமாவில் பாட அழைப்பு வரும் ஆனால் முந்தி போல் இல்லை. .
அடுத்தது கடைக் குட்டி பைரவி சின்னம்மா . அவள்பேருக்கு ஏற்ற கோபக்காரி ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பவள். குடும்ப பொறுப்பு இல்லாதவள் . படித்து அறிவியல் துறையில் இருபத்தைந்து வயதிலேயே முனைவர் பட்டம் பெற்றவள். அவளோடு படித்து முனைவர் பட்டம் பெற்ற ராஜேந்திரனை காதலித்து திருமணம் செய்தவள்.
ராஜேந்திரன் சித்தப்பா அமைதியானவர். அதிகம் பேச மாட்டார் பைரவி சின்னம்மா சொல்வதுக்கு எல்லாம் சூரன் தலை ஆட்டுவது போல் ஆட்டுவார். அவர்கள் திருமணம் செய்து இரு வருடங்களில் அவர்களுக்கு என் தங்கச்சி சுமதி பிறந்தாள். அவளும் என் பைரவி சின்னம்மாவைப் போல் படிப்பில் கெட்டிக்கரி. என் சித்தப்பவும் பைரவி சின்னம்மா ஒரே பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களாக இருந்தனர்.
என் அம்மா பாட்டு சொலி கொடுத்து வரும் வருமானம், என் துர்கா சின்னம்மா கச்சேரி செய்து வரும் வருமானம்., மற்றது என் பைரவி சின்னம்மாவும். ராஜேந்திரன் சித்தப்பாவும் கிடைக்கும் சம்பளத்தில் தரும் ஒரு பகுதி தான் 8 பேர் உள்ள கூட்டுக் குடும்பத்தை நடத்தவும் வீட்டு வாடகை. கொடுக்கவும் பில்கள் கட்டவும் எனக்கும் என் தங்கச்சியின் படிப்புச் செலவுக்கும் தாத்தா, பாட்டியின் டாக்டர், மருந்து செலவுக்கும் மட்டுமட்டாக இருந்தது . ஆனாலும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தும் . பொறுப்பு பார்வதி பெரியம்மா தலையில் விழுந்தது வீட்டு சமையல் முதல் கொண்டு பாத்திரம் கழுவி, வீட்டைக் கூட்டி துடைப்பது எல்லாம் அவளே. மார்கட்டுக்கு போய் மரக்கறி, பல சரக்கு பொருட்கள் வாங்கி வருவதும் அவளே. காலை ஐந்து மணிக்கே எழும்பி குளித்து, கோலம் போட்டு துளசி மரத்துக்கு தீபம் காட்டி. பூஜை அறைக்கு சென்று செய்ய வேண்டியதை செய்து அதன்பின் காப்பி குடித்து தன் வேலைகளை ஆரம்பிப்பாள். அது வரைக்கும் வீட்டில் மற்றவர்கள் ஒருவரும் நித்திரையில் இருந்து எழும்ப மாட்டார்கள். என் அம்மாவுக்கும், இரு சின்னம்மாக்களுக்கும் சித்தப்பாவுக்கும், இரு பிள்ளைகளுக்கும் காப்பி தயாரித்து மேசையில் வைத்து “: காப்பி ரெடி” என்று அவள் குரல் எழுப்பிய பின்னரே அவர்கள் ஒவ்வோருவராய் அறையை விட்டு வெளியே வருவார்கள் .
:” மாதவா, சுமதி உங்கள் இருவரையும் தனியாக நான் கூப்பிட வேன்படுமா. போய் பல் துலக்கி வந்து காப்பி குடியுங்கள்:” என்பாள் கண்டிப்புடன் பார்வதிஜ .
பாடுவது மூலம் வருமானம் வரும் என் அம்மா , இரு சின்னம்மாக்கள், சித்தப்பா தவறாது முதல் திகதியன்று காசை பெரியம்மாவிடம் கொடுத்துவிடுவார்கள் கொடுக்கும் பணத்தில் கூட்டுக் குடும்பம் நடத்துவது பெரியம்மா பொறுப்பு. இது எவ்வளவு காலம் தான் நடக்கும். லட்சுமி பாட்டியும், தாத்தாவையும் கவனிப்பது பெரியம்மாவுக்கு பெரும் வேலை . அவர்களை முதியோர் இல்லத்துக் அணுப்புவோம் என்று என் அம்மாவும் சின்னம்மாக்களும் ஆலோசனை சொன்னது பெரியம்மாவுக்கு பிடிக்கவில்லை. சித்தப்பா ஒன்றுமே பேசவில்லை .
“ அவர்கள் சாகும் மட்டும் அவர்களை கவனிப்பது என் கடமை என்று கண்டிப்பாக அவர்களுக்கு பெரியம்மா சொல்லி விட்டாள். அவர்களிடம் இருந்து மறு பேச்சு இல்லை.
****
அன்று “பாசமுள்ள பெரியம்மா” “என்ற தங்களின் புதிய படத்துக்கு இரு பாடல்கள் பாடுவதைபற்றி அம்மாவிடம் கேட்க தயாரிப்பாள]ர், இசையமைப்பாளர் . இயக்குனர், பாடல் ஆசிரியர் ஆகியோர் வந்திருந்தனர்.
பெரியம்மா வந்திருந்தவர்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் அம்மா பெரியம்மாவை அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். பெரியம்மா சில வார்த்தைகள் அவர்களோடு பேசினாள். இயக்குனர் பெரியம்மாவை கூர்ந்து பார்த்தார். அவவின் குரல் முகபாவனை. பார்வை .. தோற்றம் அவருக்கு வெகுவாக பிடித்துக்கொண்டது. தயாரிப்பாளரை இயக்குனர் பார்த்தார்
“ அவரும் சம்மதம் என தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார்
“ உங்கள் அக்காவுக்கு எங்கள் படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பமா அவவின் தோற்றமும், குரலும் பொருத்தமாக இருக்கிறது” : என்றார் இயக்குனர் .
“அது சரி எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் “ என் அம்மா அவர்களைக் கேட்டாள்
சற்று யோசித்து விட்டு, “ :முப்பது லட்சம் தருவோம். .அதில் அட்வான்ஸ் பத்து லடசம். எங்களின் அடுத்த படத்திலும் நடிக்க உங்களுக்கு வாய்பு உண்டு. என்ன சொல்லுகிறீர்கள்;”? தயாரிப்பாளர் கேட்டார்.
அம்மா பெரியம்மாவின் பதலை எதிர்பார்த்து அவள் முகத்தைப் பார்த்தாள்
பெரியம்மா பதில் ஒன்றும் சொல்லாமல் எழும்பி தன் அறைக்குள் போய் விட்டாள்.
என் அம்மா அதை பெரியம்மாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நடப்பதை பார்த்துபக் கொண்டிருந்தேன்
“ அக்கா வெளியே வந்து சம்மதம் என்று சொலிப் போவேன். பெரிய காசு தருவினம் அக்கா. “ என் அம்மா பெரியம்மாவை கூப்பிட்டாள்
எல்லோரும் நடக்கப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர் .
சில நிமிடங்களுக்குப் பின் மூடிய அறைக் கதவு திறந்தது. பெரியம்மா புன் முறுவலோடு வெளியே வந்தாள்.
“ உங்கள் புன்முறுவல் சொல்லுது உங்களுக்கு சம்மதம் என்று. அப்படித்தானே அம்மா”? இயக்குனர் கேட்டார்
“ மன்னிக்கவும் நான் இந்த வீட்டில் பொறுப்புள்ள பெரியம்மாவாக இருக்கிறன். என் அம்மாவையும் அப்பாவையும் அவர்களின் இறுதி காலம் மட்டும் கவனிப்பது என் கடமை , எனக்கு படத்தில் நடிப்பதும், பணமும் முக்கியமில்லை, என் கடமை தான் முக்கியம். பொருத்தமான வேறு ஒருத்தியை தெரிவு செய்யுங்கள்”: என்றாள் என் பார்வதி பெரியம்மா. எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்
அறைக்குள் தாத்தாவின் இருமல் சத்தமும், தொடர்ந்து லட்சுமி பாட்டியின் தும்மலும் கேட்டது .

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கன (2-Dec-17, 6:32 am)
Tanglish : paarvathi periyamma
பார்வை : 8500

மேலே