நெஞ்சே நெஞ்சே

பாதை மாறி நின்றேன்
நேர்பாதை நீ அமைத்தாய்!
கண்கள் மூடி நின்றேன்
இமைகள் நீ திறந்தாய்!
உந்தன் அன்பாலே
என்னை நனையவைத்தாய்!
இருள் கொண்ட என்னுல்
வெளிச்சம் தந்தாய்!
நெஞ்சே நெஞ்சே
நீ எந்தன் நெஞ்சே!
அலைகளின் வாழ்க்கை என்பதெல்லாம்
நொடியில் முடிகின்றதே!
பறவைகள் போகும் பாதையெல்லாம்
விண்மீனாய் மறைகின்றதே!
நான் உனைப் பார்க்கப் போகையிலே-உன்
நினைவினில் தானே குடியிருப்பேன்!
நெஞ்சே நெஞ்சே
நீ எந்தன் நெஞ்சே!
இறைவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு
உன்னை நான் கேட்டுநின்றேன்!
வான்முதல் வளிவரை எங்கெங்கும்
உன்முகம் பார்த்து நின்றேன்!
நான் உனைக்காணும் வரையிலே-என்
கண்ணில் நிலவும் இருண்டுநிற்கும்!!!

எழுதியவர் : sahulhameed (2-Dec-17, 6:29 pm)
Tanglish : nenjay nenjay
பார்வை : 108

மேலே