முதல் இரவு
தலையில் மல்லிகை மலருடன் பாலும்
கையும்மாய் கதவு மெல்லிய சத்தமிட உன்
முகத்தில் சிந்திய காம சிரிப்பை கண்டேன்
பால் அருந்தி மலர் கசங்க உன் வியர்பில்
வட்டமிட்ட பொட்டு களைந்து என் கன்னத்தில்
ஒட்ட. காலையில் எழுந்து கண்டவர் காணும் முன்
என் கன்னத்தை துடைத்த கண்ணகியே உன்னை
காலம் எல்லாம் கண் கலங்காமல் காத்திருப்பேன் ,,