என்னைக் காணவில்லை

என்னைக் காணவில்லை
இதயம் ஏனோ தேடவில்லை.....

பைத்தியத்தில் அலைகின்றேனா?
பைந்தமிழில் நனைகின்றேனா?
பூவுக்குள் புகுந்தேனா?
தேன் துளியாய் அமர்ந்தேனா?
எங்கே நான்
என்னைத் தேடுவது?

நிலவு அழைத்தது,
நிழல் அணைத்தது,
நிம்மதி சிரித்தது,
நித்திரை தடுத்தது,
காதல் உதித்தது,
கவிதை வடிந்தது,
கனவு மிதந்தது,
இத்தனைக்கும் தெரியவில்லை
எங்கே நான் தொலைந்தது.

கன்னியர் மனதுக்குள் சிறையிருப்பேன்
காதலூசியால் குத்திவிட்டு.....

பாவம் நான்
என்னையே எனக்கு தெரியாது,
என்னை நான்
எங்கு போய் தேடுவது.....

எழுதியவர் : கமல்ராஜ் (30-Jul-11, 10:52 pm)
Tanglish : ennaik kaanavillai
பார்வை : 559

மேலே