அலையாக நான்

என் பேனா மை
சிந்தும் எழுத்துக்கெலெல்லாம்
உன் பெயரையே
சொல்லி உருக்கொள்கின்றன

என் பெண்மை
கொள்ளும் உணர்வெல்லாம்
உன் நினைவுகளை
கொண்டே உயிர்பெறுகின்றன

உன் கருவிழி
காணும் காட்சியெல்லாம்
உன் முகத்தை
மட்டுமே நினைவுபடுத்துகின்ற்றன

என் காதல்
கொள்ளும் வலியெல்லாம்
என் நேசத்தையே
சொல்லிச் செல்லுகின்றன

என் கவிதை
சொல்லும் மொழியெல்லாம்
என் கண்ணீரையே
சுமந்து செல்கின்றன

என் கனவு
கோர்க்கும் வண்ணமெல்லாம்
என் ஆசைகளையே
ஊர்வலம் கூட்டிப்போகின்றன

என் நினைவு
அசைபோடும் எண்ணமெல்லாம்
என் காதலை
எனக்கே சொல்லிப்போகின்றன

என் தேடல்களில்
வரும் பரிதவிப்பெல்லாம்
பேதை என்நேசத்தில்
என்னை பாரமாக்கிப் போகின்றன

என் தவிப்புகள்
தரும் துடிப்பெல்லாம்
தீராத என்காதலை
என் உள்ளத்துக்கு
உணர்த்திப் போகின்றன

என் அற்புதமான அன்பை
எப்படி உனக்கு சொல்வது
என்று அறிந்திடாத
அற்ப உயிர் நான்


என் உள்ளத்து துடிப்புகளை
எப்படி உனக்குள் செலுத்துவது
என் உயிர் வலியை
எப்படி உன்னில் இறக்குவது
என்று அறியாத பேதையாய் நான்
அலைகளுக்குள் சுழலும்
நீர்குமிழியாய்
உன் நினைவுகளுக்குள் சுழலும்
மனதோடு நான்

என் வலி தெரியாமல்
என் அலைகளில்
என்னெதிரில்
கால்நனைத்து
இதமாய் சுகம் கொள்ளும்
கரையோரத்து பாதக்காரனாய்
நீ

உன் பாதங்களை
கண்களை மூடி
கட்டிக்கொள்ளவும் முடியாமல்
ஒட்டிக்கொண்டு அப்படியே
இருந்திவிடவும் முடியாமல்
விலகி தூரமா
போகவும் முடியாமல்
உன்னை தொட்டுவிட
ஓடிவரும் அலையாக
என் நேசம்

எழுதியவர் : யாழினி வளன் (3-Dec-17, 12:23 am)
Tanglish : alaiyaaga naan
பார்வை : 130

மேலே