விடைபெறா வினாடிகள்
“விடைபெறா நொடிகள்”
-முத்தி
வினாடி வினாத் தேர்வுக்குச் சென்ற எனக்கு
விடை எழுத நேரமில்லை!
வினாடிகள் அனைத்தையும் உன்
விழிகளிலேயே செலவுசெய்தேன்
நீ எனை பார்க்கும் வேளைகளில்
மட்டுமே விடை எழுதும் வேலையைச்
செய்தேன்
வினாடிகள் அனைத்தும் விற்பனையானது!
விடைகளுக்கு விடை காணும் வேளை வந்தது!
கைகளைக் கூப்பி கண்களை மூடி நீ கடவுளை வணங்கிய காட்சி கண்களை விட்டு அகலவில்லை!
ஆனால் கண்ணில்லாக் கடவுள்களோ
உனக்கு உதவவில்லை!
சில நூறு வினாடிகள் மட்டுமே விடை எழுதிய எனக்கோ என் கல்வி பேருதவிபுரிந்தது
அரங்கமே கர ஓசையால் நிறைந்திருந்தது!
புன்முறுவலுடன் எனைப் பார்த்த உன்
விழிகளுக்குள்ளோ சோகங்கள் மறைந்திருந்து!
நூறு பேர்களில் முதலாவதாக வந்தேன்!
அரங்கெங்கும் உன் கானல் பிம்பங்கள்
துளியளவும் மகிழ்வில்லாமல் மனம்
நொந்தேன்!
முதலாவதாக வந்ததை எண்ணி மகிழ்ச்சிகொள்வதா?
உன் விழிகளை கான ஏங்கி வாடும் மனதிற்கு ஆறுதல் சொல்வதா?
ஒன்றும் புரியவில்லை.........
புன்முறுவலோடு விடை பெற்றுச் சென்றது உன் விழிகள்!
அதைக் காணும்வரைத் தொடரும்
என் “விடைபெறா நொடிகள்”!
இறுதியாய்,
என்னை
படிப்பாளியாக உயர்த்திய
கல்விக்கும்!
படைப்பாளியாக உயர்த்திய செல்விக்கும்!
“அளவில்லா நன்றிகள்.”
-முத்திவீரணன்.செ