காதல் தெய்வத்திற்கு ஒரு கீதம்

என்னவள் அழகைப் பாடவந்த
கவிஞன் எனக்கு -மூலப் படியாய்
பல்லவியாய் அவள் பார்வை,
அனுபல்லவி தான் முத்துப் புன்னகை,
அது என்னை கற்பனை படிகளில்
ஏற்றிவிட அவள் அழகை நினைத்தே
காதல் சன்னதி நோக்கி இன்னும்
ஏறிட, சரணமாய் என் கற்பனையை
அவள் வஞ்சிக்கொடியிடையும்
அன்ன நடையும் கைதூக்கி தந்திட
சரணமும் முடித்து காதல்
சன்னிதானம் வந்தடைந்தேன்
எந்தன் கவிதையை சமர்ப்பிக்க
காதல் கோவில் கதவுகள் திறந்து கொள்ள
சன்னிதானத்தில் புன்முறுவல் தாங்கி
நின்றிருந்தாள் என்னவள் காட்சிதர
தரிசித்தேன் என் காதல் தெய்வத்தை

என்னவளை சரணடைந்தேன்
என் காதல் தெய்வம் அல்லவோ அவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-17, 10:30 am)
பார்வை : 68

மேலே