கண்களிரண்டும் கலங்குதடா
கண்களிரண்டும் கலங்குதடா....
காதல் கணவனை
கரம்பிடித்த களிப்பிலா...
காலம் பல
கால்கடுக்க காத்திருந்த
கழைப்பிலா..
கண்களிடரண்டும் கலங்குதடா....
கனவாக கண்ட
காட்சிகளும்
நிகழ்வாக நடக்குதடா...
விடியற்காலையில்
வியப்பாய் விழிக்கிறேன்
கண்முன்னே
என் காதலின் உறக்கத்தில்...
கண்களிடரண்டும் கலங்குதடா....
தொடுதிரையில்
தொட்டுத் தொட்டுத்
தூர்வாரிய அன்பும்
தூரத்தில் இல்லை என்று
உணர்கையில்
கண்களிரண்டும் கலங்குதடா...
தூக்கம் களைக்குமாறு
உன்னிடம் நின்றால்
களைத்துத்தான் விடுகிறாய்
களைப்பாய் என்னும்
நம்பிக்கையில்
கட்டப்பட்ட
என் கூந்தலை...
அடுப்பங்கரையில் கிடைத்த
அடுக்கடுக்கான முத்ததில்
மொத்தமும் குழம்பியது
குழம்பில்....
பள்ளிக்குச் செல்ல மறுக்கும்
சிறுபிள்ளை போல
வேலைக்குச் செல்ல
வேதனைப்படும்
உன்னைக்கண்டு
கண்களிரடண்டும் கலங்குதடா...
வெளியில் செல்லும்போதும்
வெற்றிடம் இல்லை..
உன் வாசத்தை
என் சுவாசமாய்
விட்டுச் செல்கிறாய்..
அழகே....
நரைமுடியில்
நனைந்தபோதும்
நகர முடியவில்லை...
உன் அன்பிலிருந்து..