காதலின் கொடுமை

என்றும் காட்டாத
என் முககண்ணாடி
இன்று என் முகத்தில்
பெண்மையை காட்டியது
நம் காதலின் மென்மை

மீசையற்ற ஆண்மையில்
ஆத்மா ஓன்று மூக்கின்கீழ்
கோடு வரைந்து வீரத்தின்
மருட்சியாக காட்டியது
நம் காதலின் பிரம்மை

நம்மிருவர் இடைவெளி குறைய
நீ உண்மையானாய்
நான் பொய்யானேன்
ஒருமைக்குள் ஒன்றித்தது
நம் காதலின் புதுமை

உன்னை எண்ணி எண்ணி
வரிகளை அடுக்கி அடுக்கி
முழுநிலவுக்கு முழுஆடையை
நெய்ய நெஞ்சத்தை நெறுக்கியது
நம் காதலின் தூய்மை

காலத்தின் நாட்களில்
தலை நரைத்தது
நடை நடுநடுங்கியது
உணர்வு மட்டும் இளமையானது
நம் காதலின் வலிமை

வானமென்று நினைத்து
என் நிழல் விரிய
வட்ட நிலா நீ ஓய
பல கண்களை தீண்டியது
நம் காதலின் பொறாமை

கீழ்த்திசையில் நீ சிவந்தபோது
மேற்குத்திசையை சபிக்க
காரமில்லாத கோபத்தை
என்னில் எழுப்பியது
நம் காதலின் இறவாமை

என் மூச்சுக்காற்றை அடக்கும்
கண்ணாடி குப்பியாக
உன்னை மாற்றி
உனக்குள் ஆண்மையை நாட்டியது
நம் காதலின் வன்மை

மனம் என்ற பதிவேட்டில்
இத்தணை வார்த்தைகளை
குறுக்கு கோட்டால் கிழிக்க
பிரிவு கையெழுத்து இட்டது
நம் காதலின் கொடுமை

எழுதியவர் : க. ராஜசேகர் (3-Dec-17, 10:56 am)
Tanglish : kaadhal kodumai
பார்வை : 128

மேலே