மறுக்காதே நெஞ்சமே 💔

ஆறறிவு இருந்தும் அமைதியில்லை பெண்ணே,
மனம் ஆறுதலானது உனைக் கண்ட பின்னே.

நிம்மதியில்லா என் நெஞ்சத்தில்,
நிமிட நேரத்தில் நீ தஞ்சம் புகுந்தாய்.

கனவிலும் அடிக்கடி வந்து சென்றாய்.
கவலைகள் எனதை ,எடுத்து சென்றாய்.

விடிந்ததும் உன்னைப் பார்த்த பின்னே,
விடுதலை கைதியாய் உணர்வேன் என்னை.

அருகில் வந்து நீ பேசும் நேரம்,
என் ஆயுளின் நாட்கள் கூடுது பெண்ணே.

காலையும் மாலையும் மறந்தே போனது.
எனக்குள் காதல், உன்னால் ஆனது.

உனக்கும் என்னைப் பிடித்த பின்புதான்,
என்உயிரின் மதிப்பே உண்மையானது.

நன்றாய் சென்ற நம் காதலில்,
நடந்தது என்ன திடீரென்று?

பழகித் திரிந்த நாட்களை எல்லாம்,
பாதியில் நீயும் எப்படி மறந்தாய்?

சிரித்துப் பேசிய புன்னகைப் பூவே,
நீ சிந்திப்பதன் காரணம், என்னவென்று கூறு?

விதி வந்து சதி செய்தும்,
விலக்காத நம் காதலை,
உன் மெளனம்தான் விலக்குதடி!
மரணம் என்னை நெருக்குதடி!

இறந்து போ என்று சொல்,
இறக்கின்றேன் பெண்ணே!
மறந்து போ ,என்று மட்டும் மறுத்து விடாதே....!

எழுதியவர் : தங்க பாண்டியன் (3-Dec-17, 11:01 am)
பார்வை : 144

மேலே