கலியுக கம்பன்
கம்பனாக இருந்தாலும் கை நடுங்குகிறது
கண்ணி உன் கண் பார்த்து கவி எழுத ...
அங்குலம் அங்குலமாய் வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
பழைய கம்பனாய் எழுதி இருந்தால் பச்சை தமிழ் என்பார்கள் ,
இப்போது கொச்சைதமிழ் என்பார்களே !
அதிகாலை உன் அன்னநடை அழகு
அனுதினமும் மரபு மீறாமல் நீ உடுத்தும்
வண்ண உடை அழகு
பெருத்திடாத ஐம்பது கிலோ
எடை அழகு
பாதி முகம் மறைக்கையில்
கோதிவிடும் நீளக்கூந்தல் அழகு
ஊதி நீ வைத்த கோவில் திருநீர்
வியர்வையில் கரைந்ததுபோக
மீதி நிற்குமே அதுவும் அழகு
சேலை அணிந்து நீ வரும்போது
மூளை மயங்கி நிற்கிறேனே
ஐயோ, அது என்னே! அழகு
ஏழைதானே இவ்வுலகமே
உன் அழகு சிறப்புகளுடன்
ஒப்பிட்டும்போது!!