காணாமல் போன கவிதைகளை
காணாமல் போன கவிதைகளை ...
உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !
உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !
எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்
அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !
ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !
யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..
கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !
கண்ணே புன்னகைத்திரு
தினம் புது புது
கவிதைக்கு விதை இடு !
- யாழ் ..