மீட்டுக்கொடு

காதல் செய்தவன் நான்
காலம்முழுதும் வாழ்பவன் எவனோ !
முத்தத்தில் குளித்தவன் நான்
மூழ்கி முத்தெடுப்பவன் எவனோ !
மணமுடிக்க நினைத்தவன் நான்
மாங்கல்யம் தருபவன் எவனோ !
தாலாட்டைப் பயிற்றுவத்தவன் நான்
மடிசாய்ந்து கேட்பவன் எவனோ !
சாதிக்க முயற்சித்தவன் நான்
சரித்திரம் படைப்பவன் எவனோ !
இறைவா என்னோடுவாழ்ந்த என்னுயிரை
மீட்டுக்கொடு என்னிடமே !...