குழந்தைகளே

குழந்தைகளே !

இறந்த இல்லத்திற்கு சென்று
திரும்பும்போது சொல்லும்
"போய்கிறேன்"
என்ற வார்த்தையை
உன் இறந்தகாலத்திற்கு
சொல்லி நகர்ந்துவிடுங்கள்

கடிகாரத்தில் சுற்றப்படாத
நொடிகளின் வெளிப்படாத
ரகசியங்களின் பிறப்பை
நினைத்து பிரசவ தாயக
வலிபெருகின்ற வாழ்க்கைக்கு
வாழ்த்துவதை நிறுத்திவிடுங்கள்

இறந்தவன் மட்டுமே
காலத்தின் சுழற்சியில்
உருளத சக்கரம்போல்
கல்லறையை கருவாக்கி
மண்ணுக்குள் வீழ்ந்த விதைக்கு
எதிராக பிறவாமல் வாழ்கின்றான்


நாம் பிறவாத நொடிகள்
அற்புதங்களை அரங்கேற்றும்
விழித்து பார்க்கின்றபோது
வாழ்க்கையை வளமாக்க
விதைத்து போன விரல்களன்றி
விரைத்துப்போன விரல்களாகும்

நிமிஷங்கள் நித்திரைக்குள்
மறைந்து போவதில்லை
தூக்கம் சொக்கும்
நடுஇரவில் உன்கண்கள்
விழித்து பார்த்தாலும்
கடிகாரமும் சுற்றும்

காரணமில்லாத வாழும்
நம் அடிகளின் நொடிகளில்
நம் சுவாசிக்கும் காற்றை
நச்சுக்காற்றை மாற்றும்
இயந்திரமாய் அமரர்போல்
நம் உடல் ஓய்ந்திருக்கும்

இறந்தகாலத்தின் உங்கள் கரு
எதிர்காலத்தில் கல்லறையாகயின்றி
கல்வெட்டுகளில் உங்கள் புகழ்
அழியாத சிற்பமாய் செதுக்கப்பட
தீர்மானிக்கும் இந்த நிமிசத்தை
நீங்கள் குழந்தையாக
பிறக்கும் தருணமாக்குங்கள்

குழந்தைகளே !
ஒவொரு நொடியும் பிறந்திடுங்கள்
வாழ்நாள் முழுவதும்
குழந்தைகளாகவே வாழ்ந்துடுங்கள்

உங்களை செதுக்க நினைக்கும்
உங்கள் சிற்பியிடம்
நீங்கள் மாற நினைக்கும்
அந்த அழகான தோற்றத்தை
சொல்ல மறந்துவிடாதீர்கள்

உங்கள் சிற்பியான
ஆசியரிடம் சொல்லுங்கள்
"உங்கள் அறிவு உளி
எங்கள் கனவுகளை உடைக்கவேண்டாம்
எங்கள் கனவுகளின் நிஜத்தை
உருவாக்கட்டும்"

எழுதியவர் : க. ராஜசேகர் (6-Dec-17, 4:18 am)
Tanglish : kulanthaikale
பார்வை : 5349

மேலே