முதல் பார்வையில் காதல்

அழகிய பெண்ணே !
உன்னை கண்ட பின்னே
காதல் சொன்னது
நீ கடவுள் என்றது

புதுபுது உருவத்தில்
உன்னை கண்டது
பிரம்மன் உருகி உருகி
உன்னை உருக்கி உருக்கி
உலகை படைத்தது

உன் செல்ல கோபத்தில்
செதுக்கினான் சின்ன சின்ன
ஆகாய வெள்ளி பூக்கள்

உன் கடும் சினத்தில்
சுத்தி அடித்து வளைத்தான்
ஆகாய சூரியகாந்தி

உன் அழகு முகத்தை
மஞ்சள் வர்ண நகலாக்கினான்
ஆகாய மகள் நிலா

உன் வெக்கத்தின் சொற்களை
வெவ்வேறு வண்ணமாய் வடித்தான்
பூமியின் பல பூக்கள்

உன் குளியல் நீரை சலித்தான்
பனி துளிகள் - அவற்றை
சலிக்காமல் கோர்த்தான் மழை துளிகள்

உன் உடம்பில் விழுந்த
மழை நீரின் அழகு சத்தத்தில்
பாடினான் ச ரி க ம ப த நி ச

அழகே! பிரம்மனின் உடைப்பில்
உன்னை கண்ட பின்னே
காதல் சொன்னது

காலம் உன் நிழல் என்றது
உன் நிழலில் என் காலம் நிக்குது

கடவுள் உன் சாயல் என்றது
உன் சாயலை என் கைகள் தொழுவுது

என் உலகம் இறந்தது
புது உலகம் பிறந்தது
புது கடவுளாய் நீ தோன்றியது
அந்த அழகினை பார்த்ததில்
எந்தன் ஆத்மா தெரிந்தது

அழகிய பெண்ணே
உன்னை முதலில்
பார்த்த கணத்தில்
இதய துடிப்பில்
காதல் பிறப்பில்
நான்

எழுதியவர் : க. ராஜசேகர் (6-Dec-17, 2:39 am)
பார்வை : 408

மேலே