காதல்

நான் காண்பதென்ன கனவா நெனவா
இப்படி ஓர் இள நங்கை
இந்த புது யுகத்தில் என் முன்னே
அவளை நான் பார்த்தேன், அதுவே
அவளை நான் பார்த்த முதல் பார்வை
அவளும் ஒரு நொடி என்னை பார்த்தாள்
பார்த்த பார்வையிலேயே என்னை
சிலையாக்கிவிட்டாள், ஒரு நிமிடம்
நானும் திக்குமுக்காடி சொக்கிப்போனேனே
செயலிழந்து , வாயடைத்து -அத்தனை
அழகு கொட்டியது அவள் அந்த பார்வை!

இப்படியும் ஓர் நங்கை இந்த
புதுயுகத்தில் .............அவள்
கோலத்தில் பகட்டில்லை, அவள்
நடை உடையிலும் அஃதேதும் இல்லையே!
சிங்கார வடிவழகி மை இட்ட கண்ணழகி
கெண்டை தவழ கண்ணழகி
சின்ன வண்ண நெற்றியில் சிவப்பு
பொட்டு வைத்த நுதல் அழகி
எடுப்பான அவள் நாசியில் ஜொலிக்குது
வைர மூக்குத்தி , காதிரண்டில்
தொங்கும் மகர் குண்டலங்கள்
சிவந்த சிறு வாயில் உதிர்க்கும்
முத்து சிரிப்பு .....................
பின்னிய கார்மேகக் கூந்தல்
அதில் வாசமிகு ஒற்றை சிவப்பு ரோசா பூ
மஞ்சள் பூசிய அவள் முகத்தில்
பொழியுது தெய்வ ஒளி
தேக்கின் பொலிவு அவள் உடலழகு
அதைப் போர்த்தி அழகு பாக்குது
மதுரை சுங்கிடு நீல சேலை
நேர்த்தியான இள மார்பழகு
பட்டு கச்சைப்பின்னே எழில் காட்டுது
தாமரைத்தண்டு இடை அழகி அவள்
கால்களில் பூட்டியதோ வெறும்
வெள்ளி கொலுசுகள் இரண்டு ,
அன்னக்கிளி அவள் நடக்கையில்
ஜல் ஜல் பரத ஜதி ஓசை மெல்ல கேட்குது
அச்சம், நாணம், மடமை பயிர்ப்பு
பெண்ணே உந்தன் தனி அழகிற்கு
இலக்கணம் ......

என்னென்று அழைத்திட நான் உன்னை
உந்தன் முதல் பார்வையிலே என்னை
சிறை வைத்தவளே, நீ இந்த நவ யுகத்து
நாரி அல்லவே அல்ல
என்னுள்ளத்தை அள்ளிய
பண்டைத் தமிழழகி ,உன்னைப்போல்
பெண்ணழகை தஞ்சை பெரிய கோவில்
சித்திரங்களில் மட்டுமே இதற்க்கு முன்னர்
கண்டிருக்கிறேன் ..............................

அதனால் அல்லவோ பெண்ணே
பார்த்த முதல் பார்வையிலேயே நான்
சொக்கிபோனேனடி மகுடி முன் அரவம் போல்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Dec-17, 1:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 392

மேலே