அழகியல் நீ

எந்தன் விரல்கள் ..
வாயிட்டு அழ...!
துவல்களும் துரிதமாய்
தீர்ந்து போக.....!
காகிதங்களைக் கிறுக்களில்
நிரப்பிக் கொண்டிருக்க..!
காரணம்.......?
ஒளிரும் ஆதவனும் நின்னழகில்
குளிர் காயும் வேலையில் உனைக் காண..!
ஒப்பனைகளால் கூட ஒப்பிட இயலா
நின் அழகை ஒப்பிட முயல...!
என் இரவுகள் மட்டும் நீள
அதில் தூக்கத்தைத் தொலைக்க..!
கவியிட்ட காகிதமெல்லாம் அறை முழுக்க
குப்பை மேடடென தேங்கி நிற்க..!
நானும் எழுதி கொண்டிருக்கிறேன்.....