மழை பெய்து ஓய்ந்த மறுநாளில்
மழை பெய்து ஓய்ந்த மறுநாளில்
வீசும் இளம் வெய்யிலும்
இலைநுனியில் இன்னும் எஞ்சியிருக்கும்
மழைத் துளியும்
குளிர் காய்ந்து சிறகு விரிக்கும்
சிட்டுக் குருவிகளும்
முகிழ்த்த மொட்டுக்கள் முகம் மலர்ந்து
சிரிக்கும் அழகும்
கவி எழுத இயற்கை தந்த வரம் !