பெண்களின் சோகம்

பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் , இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !

இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !

இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !

இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !

இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும் “தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

எழுதியவர் : (7-Dec-17, 12:22 pm)
Tanglish : pengalin sogam
பார்வை : 695

மேலே