மனம் ஏங்குதடி
![](https://eluthu.com/images/loading.gif)
மயில்தோகையினும் மெல்லிய
உன் கூந்தல்
என்னை வருடி செல்ல ,
மலர்சூடி நீ - வெட்கத்தில்
முகம் சிவக்க ,
கண்களில் காதல் தழும்ப,
உதடுகள் என்னை அழைத்து
காதல் சொல்ல
மனம் ஏங்குதடி ....
ஒருமுறையாவது சொல்லடி ,
நான் எப்பொழுதும்
உனக்கானவள் என்று ......
ஏன் இந்த மௌனம் ?
ஏன் இந்த நாடகம் ?
கொஞ்சம் சொல்வாய்யடி...
என்னை மீட்பாய்யடி
நீ தரும் காதல்
அவஸ்தையிலிருந்து .....