சுகமான வாழ்க்கை

மார்போடு மார்புரசும்
மாயம் தீடடீரென்று நிகழும்
ஒருமுறை நடந்துவிட்டால்
நித்தம் ஒருமுறையாவது நினைவுஎழும்

இதழைக்கொஞ்சம் கொடுயென்று
நான் ருசிபார்க்க கேட்கிறேன்
எவ்விளைவு நிகழ்ந்தாலும்
அதற்கு நானே பொறுப்பேற்கிறேன்

சுகவாசிநான் இங்கிருக்கையில்
சுகமூட்டும் நெருப்பு நீயெங்கே
உன்னையே எண்ணும்
உன் கணவனின் உயிருமங்கே

சிறப்பான விருந்தென்றால்
உன்னோடு சேர்ந்துண்ணும் உணவுதான்
அதனைவிட சிறப்பென்றால்
உன்னோடு நான்பேசும் முழுஇரவுதான் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (8-Dec-17, 12:37 pm)
பார்வை : 171

மேலே