பெண் எனும் பிரபஞ்சம்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண் எனும் பிரபஞ்சம் ! கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்
பெண்ணே நீ
மஞ்சத்தில் ஆடவர்
கொஞ்சி விளையாடும்
பொம்மை அல்ல.
பெண்ணே நீ
மஞ்சத்தில் உறவாடி
உணர்வில் கலந்து
உயிரில் சேர்ந்து
கருவைத் தாங்கும்
பிரபஞ்சம் எனும்
பொன் மகள்.
பெண்ணே நீ .
அடைகாக்கும்
பெட்டைக்கோழி அல்ல
பிரபஞ்சமே வியக்கும்
ஆடும் மயில் நீ !
பெண்ணே நீ
நிற்கும் மலையோ
ரசிக்கும் சிலையோ அல்ல
பிரபஞ்சம் எதிர்நோக்கும்
வான் மழை !
பெண்ணே நீ
மனித இதயங்களை
புனிதமாக்கும்
பிரபஞ்சமே நீ !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை