ஏய் பெண்ணே

ஏய் பெண்ணே!...

நான் தொலைக்கும் நிமிடங்கள்
ஒவ்வொன்றும்,

உன் ஓர பார்வையால்
உயிர்தெழுகிறது

ஏழு ஜென்மமாக
பின் தொடர்கிறேன் பெண்மையே

பிறக்கும் காலம் நம்முடையாதக மாற
காத்திருக்கிறேன் கனவுகள் ஏந்தியவனாக

பூத்திருப்பாயோ என் காதல் அரண்மனையின் பகலாக

பிறைநிலா மலர்கையில் என் மனம்...

என்னவளாக நீ வருவாய் என ஏங்குதடி ...

இரவுகள் கழிகையில்
கனவின் பிம்பங்கள் கைதறிகளாக

மனதில் பின்னுதடி பிரிந்து செல்லும் நினைவுகளின் வலியை எண்ணி...

உன் கரம் பிடிக்கும் நாட்கள்
கரைந்து செல்லும் மேகங்களாகவே!...

எழுதியவர் : சண்முகவேல் (8-Dec-17, 4:20 pm)
Tanglish : EI penne
பார்வை : 174

மேலே