ஜென்மம் ஒன்று வேண்டும்

ஜென்மம் ஒன்று வேண்டும்
மீண்டும் இப்பிறவி எடுக்க......
உன் மகளாய் நானும் மீண்டும்.....................
உன் நுனிவிரல் பிடித்து நடக்க.......
வயிற்று மெத்தையில் படுத்து உறங்க.......
தோள்களில் ஏறி சவாரி செய்ய...........
முத்தம் ஒன்று கேட்கும் போது
"போப்பா மீசை குத்துது "என்றுசொல்லிட........
மறுநாள் மீசையில்லா நீயும் முத்தத்திற்க்காக காத்திட.............

மீண்டும் ஜென்மம் ஒன்று வேண்டும்....
என்ன பாவம் செய்தேனோ நானும்
இந்த வரம் கிடைக்காமல் போக.............
ஏங்கி ஏங்கியே தொற்று போகிறேன்
வாழ்நாள் முழுவதும்........
பொறாமைக்காரி ஆகிப்போகிறேன்நானும்
அன்பான அப்பா மகளை பார்த்து.............
எங்க நீயென்று தேடும் எனக்கும்...
நீ எங்கே என்று கேக்கும் மற்றவர்களுக்கும்..
என் கண்ணீர்துளிகளே பதில்....!

இருந்த போதும் வருந்தினேன் புரிந்துகொள்ளாமல்...
இல்லாத போதும் வருந்துகிறேன் புரிந்துகொண்டு..!

ஜென்மம் ஒன்று வேண்டும் ............
மீண்டும் .........நான் ஏங்கிய வரம் கிடைக்க............!

இப்படிக்கு உன் மகள்
தோற்றவர்களின் பட்டியலில்
உன் அன்பு கிடைக்காமல்
தோற்றவளாய்ய்...........................

எழுதியவர் : reshma (8-Dec-17, 4:41 pm)
Tanglish : jenmam ondru vENtum
பார்வை : 366

மேலே