என்னவள் முகம்
நிலவே நீ பேரழகு
அதுவும் முழு நிலவாய் ,
பௌர்ணமியில் வெள்ளி
நிலவாய் காய்கையிலே,
பாவம், ஆனால் நீயோ ,
சாபத்தால் தேய்ந்து வளர்கின்றாய்,
வளர்ந்து தேய்கின்றாய் ,
இதை போக்கிக் கொள்ள இன்னும்
உனக்கு தெரியலையே
பாவம் நீ, வெண்ணிலவே !
என்னவளை நீ பார்த்தாயோ, வெள்ளி நிலவேl
உன்னைப்போலவே அவளும்
அழகு முகம் கொண்டவளே ;
ஆனால் அந்த முகம்
ஒரு போதும் தேய்ந்து வளர்வதில்லை
வளர்ந்து தேய்வதும் இல்லை
இளமை உள்ளவரை
அது என்றும் வளர்நிலவே , ஒளிநிலவே !

