எண்ணமெல்லாம் நிறைந்தாயடி

மின்னும் கண்கள் மின்னலடி
தின்னும் எண்ணம் தரும் கண்ணமடி
கொஞ்சும் வார்த்தைகள் கவிதையடி
கொஞ்சிட தூண்டிடும் தேகமடி
கொல்லாமல் கொல்லும் மௌனமடி
காலை கதிரவனாய் காதலடி
மெல்ல உருகிடும் உன் மௌனமடி
ஏதோதோ செய்தபடி
எண்ணமெல்லாம் நிறைந்தாயடி

எழுதியவர் : ஜெகன் ரா தி (9-Dec-17, 1:18 pm)
பார்வை : 323

மேலே