யார் இவன்

இவன்
குரல்ஒலி கேட்கின்ற
தருணங்கள் எல்லாம்
என் மனதிலே
ஒளிமயம் பிறப்பது ஏன்?

இவன்
கரவொலி எழுப்பிடும்
தருணங்கள் எல்லாம்
என் கனவுகள்
நிறைவு பெறுவது ஏன்?

தொலைதூரம் கடந்த
என் வாழ்க்கை பயணத்தில்
இடைவிடாது
இவனும்
பயணிப்பதேன்?

இவன்
நினைவுகள் தவிர்த்தால்
என் வாழ்க்கை முழுதும்
வெற்றிடம் ஒன்றே
வழிவது ஏன்?

இறுதியில்...

என் உயிரினில் கலந்து
என்னோடு பயணிக்கும் "இவன்"யாரென்று அறிய
இறைவனிடம் கேட்டேன்
புன்னகைப் புரிந்து
பதிவைத்தந்தார்
உன் நண்பன் என்பாயே
அவன் தான் என்று

அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (9-Dec-17, 4:04 pm)
Tanglish : yaar ivan
பார்வை : 477

மேலே