உன்னை நெருங்கிட

சுட்டி பேச்சும்
குட்டி குறும்பும்
வெட்கி மறையும்
நான் அருகில் நின்றிட
நேர்நோக்கா கண்கள்
நொடிநோக்கிட
கூர்வேலென காதல்
நெஞ்சமிறங்கிட
காதல் இவளென
காலம் கூறிட
சம்மதம் கேக்கிறேன்
சமமாய் கலந்திட
கட்டி தழுவும்
விண்ணும் மண்ணும்
வெட்கி பிரியும்
நாம் அருகில் சென்றிட
விலகி செல்கிறாய்
விண்ணை போல
விடை கேட்டு
உன்னை நெருங்கிட