தேக்கி வைத்த நினைவுகள்
நீ பற்றிய நினைவுகள் என்பது
இதயத்தில் தேக்கி வைக்க இடமில்லாமல்
காகிதங்களில் தேக்கி
வைக்கப்பட்டன
அந்த காகிதங்களில் தேக்கி வைத்த
நினைவுகள் யாவும் மூடி
வைக்கப்பட்டிருந்தாலும்
காற்றோடு கதை பேசி
சிறகடித்துப் பறந்து நினைவினை
நினைவூட்டுகை பண்ணிக்கொண்டிருக்கின்றன.
உன் நினைவுகளுக்கு, நான் உன் மீது கொண்ட காதல் உயிர் கொடுத்து விட்டது.