உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி4

" விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சி, நேத்து காலைல போனவன் இன்னும் வரல. போனைக் கூட எடுத்துட்டுப் போகல. "
காயத்ரி அம்மாவின் கவலை கந்தசாமியைச் சிந்திக்கத் தூண்டியது.
அவர் போலீசில் புகார் பண்ணலாமென்று காவல் நிலையம் சென்றார்.
அங்கு இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெகன் கூட ஐ.பி.எஸ் எழுதிய தினேஷ். அவனுடைய புகைப்படத்தைப் பார்த்ததுமே கண்டு பிடித்துவிட்டார்.
ஜெகனின் தந்தையிடம், " நீங்க கவலைப்படாமல்
வீட்டுக்குச் செல்லுங்கள். உங்க பையனைத் தேடிக் கண்டுபிடித்து தருவது என் பொறுப்பு. ", என்றார் இன்ஸ்பெக்டர் தினேஷ்.
" ரொம்ப நன்றிங்க சார். அவனை எப்படியாவது கண்டுபிடிச்சுருங்க. ", என்று கூறிவிட்டுக் கிளம்பினார் கந்தசாமி..
தினேஷ் ஜெகனின் புகைப்படத்தைப் பார்த்தார்.
ஐ.பி.எஸ் எக்ஸாம் போகும் போது ஜெகனை சந்தித்தது, ஜெகனும் பேசியதுமே தினேஷிற்கு ஜெகனைப் பிடித்துவிட்டது.
அதன் பிறகு இரண்டு மூன்று முறை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல நண்பன். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவன்.
இப்போது எங்கே போயிருப்பான்?.
தேடலைத் தொடங்கினார் தினேஷ்...
ஜெனிபர் ஜெகனின் வீட்டிற்குச் சென்றாள் அவனுடைய சான்றிதழ்களில் இருந்த முகவரியை வைத்து.
அங்கே காயத்ரி அம்மா இருந்தார். கந்தசாமி வேலைக்குப் போயிருந்தார்.
ஜெனி ஜெகனின் வீட்டின் முன் இருந்த புறாக்கூட்டில் இருந்த புறாக்களுக்கு தீனி போட்டுவிட்டு வீட்டு வாசலில் நின்று, " ஜெகன் இருக்காங்களா? ", என்று கேட்டாள்.
" அவன் வீட்டுல இல்ல. யாருமா நீ? எதுக்கு அவனைத் தேடுற? "
காயத்ரி அம்மா கேட்டார்.
" என் பெயர் ஜெனிபர். ஜெகனோட ப்ரண்ட். பக்கத்துல ஒரு வேலையா வந்தேன். அப்படியே ஜெகனைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். "
" உள்ளே வாம்மா. உட்காரு. டீ எதாச்சும் சாப்பிடுறியா? "
" நீங்க இருங்க ஆன்டி. சமையலறை எங்கனு சொல்லுங்க. நான் டீ போட்டுகிறேன். "
" அந்த ரூம் பக்கத்துல தான் மா. "
" சரிங்க ஆன்டி. "
ஜெனி டீ போட்டுக் கொண்டிருந்தாள்.
" உங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்க? "
" அப்பா பெயர் கனகராஜ். மனோதத்துவ நிபுணராக இருக்கிறார். அம்மா பெயர் மேரி. ஆசிரியராக பணியாற்றுகிறார். "
" நீ என்ன பண்றமா?. "
" நான் பி. ஏ முடிச்சுட்டு வீட்டுல சும்மா தான் இருக்கேன். அப்பா, அம்மா நான் வேலைக்குப் போவதை விரும்பல. "
" ம்ம். அப்போ அப்பா, அம்மாவோட ஒரே செல்லப்பொண்ணுனு சொல்லு. "
" ஆமா ஆன்டி. டீ இந்தாங்க. ", என்றவாறு டீ கப்பை நீட்டினாள் ஜெனி.
டீ கப்பை வாங்கி டீயைப் பருகிய காயத்ரி அம்மா, " ரொம்ப நல்லா இருக்கு. டீ மட்டுந்தான் போடுவியா? இல்ல, நல்லா சமைக்கவும் செய்வியா? " ,என்றார்.
" சமைக்கவும் தெரியும் ஆன்டி. அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க. ", என்றாள் ஜெனி.
காயத்ரி அம்மா ஜெகனின் அறைக்குச் சென்று ஒரு ஆல்பத்தைக் கொண்டு வந்தார்.
அதை ஜெனிபருக்குக் காட்டினார்.
அதை பார்த்துக் கொண்டே இருக்கையில் ஜெனி காயத்ரி அம்மாவுக்குத் தெரியாமல் ஜெகனின் ஒரு போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அதை காயத்ரி அம்மா கவனிக்காமல் இல்லை.
கண்டுகிடாமல் இருப்பது போல் நடித்தார்.
" இப்படி ஒரு மருமகள் அமையக் கொடுத்து வைத்திருக்கனும். ", என்று காயத்ரி அம்மாவின் மனம் பெருமிதம் கொண்டது..
தன் மகனின் திருமணம் நிகழ்வதைப் போல் கற்பனை செய்து கண்டு மகிழ்ந்தார்.
" சரிங்க ஆன்டி. நேரமாகிடுச்சு. நான் போய்ட்டு வாரேன். ", என்று கூறிவிட்டு ஜெனி கிளம்பினாள்.
தெரு வரை வந்து ஜெனியை, " பத்திரமா பொய்ட்டு வாம்மா. ", என்று வழி அனுப்பினார் காயத்ரி அம்மா.
ஜெனி செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்த காயத்ரி அம்மா, " ஜெகன் எங்க இருக்கிறானோ? ", என்று நினைத்தார்..
ஆறு வழியாக பறந்து சென்றது ஜெனி அனுப்பிய ஆண் புறா.
பறக்கும் போது மலையை ஒட்டிய பள்ளத்தில் ஆற்று ஓரமாக துப்பாக்கிக் குண்டுகளால் காயம்பட்டு மயங்கிக் கிடந்த ஜெகனைப் பார்த்தது.
அருகிலே சென்றது.
" என்ன செய்யலாம்? ", என்று யோசித்தது.
கொஞ்சத் தொலைவில் குரங்குக் கூட்டங்களைப் பார்த்தது ஞாபகம் வர புறா பறந்து சென்றது.
சிறிது நேரத்தில் நான்கு குரங்குகளுடன் ஜெகனிடம் வந்தது.
ஜெகனைத் தூக்கிக் கொண்டு குரங்குகள் தங்கள் கூட்டம் இருந்த இடத்தை நோக்கி நடந்தன.
அங்கு ஒரு குகை இருந்தது. அதனுள் ஜெகனை படுக்க வைத்தன.
புறா வந்து அருகே அமர்ந்தது.
ஒரு வயதான குரங்கு அங்கு வந்தது. அந்தக் குரங்கு ஜெகனை உற்று நோக்கியது.
கூர்மையான தன் கை நகங்களாலே ஜெகனின் உடலில் துளைத்திருந்த துப்பாக்கிக் குண்டுகளை எடுத்தது.
பிறகு மூலிகைகளை அரைத்து காயங்களின் மேல் பூசி வாழை இலைகளால் கட்டியது..
மயக்கம் தெளிந்த ஜெகனுக்கு காயங்களின் வலியைவிட வயிற்றுப்பசியே பெரியதாக தெரிந்தது.
எழ நினைத்தான். எழ இயலவில்லை.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்கு ஓடி வந்து வாழைப்பழங்களை எடுத்துக் கொடுத்தது.
இரண்டு குரங்குகள் வந்து ஜெகனைத் தூக்கிப்பிடித்தன.
பழங்களைச் சாப்பிட்டு பசியாறினான்.
புறா வந்தது. அடையாளம் கண்டு கொண்டான்.
ஜெனியை நினைத்தான்.
அப்பா, அம்மாவை நினைத்தான்.
தான் போக வேண்டுமென்று எழுந்தான்.
குரங்குகள் வேண்டாமென்பதைப் போல் அவனைப் படுக்க வைத்தன.
அவற்றின் மொழி புரியவில்லை. ஆனால், அவற்றின் அன்பை உணர முடிந்தது.
தனக்கும் ஓய்வு தேவை எனத் தோன்றியதால் தூங்கினான்..
ஜெனிபர் தன் வீட்டில் நுழைந்தாள்.
" எங்கு போன மா? "
மேரி அம்மா கேட்டாங்க.
" ஜெகன் வீடுவரை சென்றிருந்தேன் அம்மா. ஆனால் அவன் அங்கு இல்லை. அவங்க அம்மா மட்டும் தான் இருந்தாங்க. "
ஜெனி ஜெகனின் வீட்டில் அவனுடைய அம்மா தன்னிடம் அன்பாக பழகியதைப் பற்றிக் கூறினாள்.
மேரி அம்மா சந்தோஷப்பட்டாங்க.
நேரம் இரவு ஏழு மணியாகியது.
கனகராஜ் வந்தார்.
இரவு சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு தூங்கச் சென்றனர்.
தூங்கும் முன், ஜெனி ஜெகனின் போட்டோவைப் பார்த்துக் கொண்டு, " குட்நைட். ஸ்லீப் வெல். ", என்று கூறிவிட்டு படுக்கையில் படுத்தாள்.
திடீரென ஜெனியின் ஞாபகம் வர வானத்து நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன்.
அப்படியே அயர்ந்து தூங்கிப் போனான்...