வலிமை ஆணுக்குண்டா

ஓலியெழுப்பி
வெளி கொணரும்,
வரம்பு மீறி
வம்புக்கு துணை போகும்,
மனித நாக்கின்
மையப் பகுதி
அமைதி மண்டலம்
எனக் கூறுவதுபோல்

பண்பாடென்றும்
பலவீனமென்றும்
பெண்ணினத்தை
அடிமையாக்கி, ஆட்டிபடைத்த
ஆணினத்தின் அறிவு—பள்ளி
படிப்பில் பின்தங்கும்
முரண்பாட்டை
என்னவென்று சொல்ல!

அறியுமோ வையகம்
ஆணைவிட பெண்
ஆண்டுகள் எட்டு
அதிகம் வாழ்கிறாளாம்,
நோயை எதிர்க்கும் சக்தி—ஆணைவிட
நங்கையருக்கு அதிகமுண்டாம்
அதனால் தானோ சக்தி
என்ற பேருமுண்டாம்

மாரடிக்கும் பெண்களுக்கு
மாரடைப்பு எனும்
பேரிழப்பும் ஆண்களைவிட
பெண்களுக்குக்
குறைவாம் என்ற
உண்மைதனை சொன்னால்
ஒத்துக்கொள்ளும்
வலிமை ஆணுக்குண்டா?

எழுதியவர் : கோ. கணபதி. (11-Dec-17, 8:38 am)
பார்வை : 77

மேலே