மழையில் தழைத்த புல்வெளிகள்

பலநேரங்களில், நம்முடைய உறவினர்களோடும் , நண்பர்களோடும் , கருத்துவேறுபாடு காரணமாக சண்டையிட நேர்கிறது.
இதற்குப் பிறகு ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. சண்டைக்கான காரணம் நீர்த்துப்போய் பலநாட்களான பிறகும், தன் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்த பிறகும், இந்த நிலை தொடர்கிறது !
யார் முதலில் பேசுவது என்ற தன்மானப் பிரச்சினை!
ஒரு நாள் இந்த மனநிலையைத் தாண்டி, அவரைப் பார்க்கும்போது ஒரு புன்னகை புரிந்துதான் பாருங்களேன்!
சிறுமழையைப் பார்த்ததுமே நிறம்விரித்த புல்வெளி போல, உறவுகள் மீண்டும் மலரக் காண்பீர்கள்!
இது பற்றி----
அன்புடன்
ரமேஷ்

நீரின்றிப் பலநாட்கள் கருகிய புல்வெளியும்
ஓரிரவின் சிறுமழையால் உயிர்ப்பதுபோல் - போரிட்டு
சிறுபகையால் பிரிந்திருந்த நண்பர்கள் பிணக்கினையோர்
ஒருமுறுவல் ஒழித்துவிடும் காண். (

எழுதியவர் : (11-Dec-17, 10:16 am)
பார்வை : 76

மேலே