எனக்குள்ளே தீயாய் என்றும் என்கவி பாரதிதீயாய்
வலிகள் ரணமாக
வார்த்தைகள் வலுவாக
வீரத்தின் விதையாக
விவேகத்தின் உருவாக
ஏனென்ற கேள்விக்கு
எனக்குள்ளே நீவந்தாய்..!
அடிமையின் வாழ்வுக்கு
படியாதவுன் பகுத்தறிவு
விடியாத பொழுதுக்கு
விடையன்றோ உன்கனவு;
பண்பாட்டில் பெண்ணுக்கு
உன்னாலே புதுவாழ்வு..!
அதிகாரம் உள்ளவனை
அகங்காரம் பிடித்தவனை
விதிவெல்லும் எனச்சொல்லி
வேடிக்கை பார்க்காமல்
வீறுகொண்டு எழுந்தாயே
வேதனைகள் தாளாமல்...!
சாதியெனும் சாவுக்கு
சவுக்கடியை நீ-தந்தாய்
சறுக்கிவிழும் மனிதனுக்கு
சரித்திரமே நீயென்றாய்..
தீண்டாமை பாவத்தை
தீயிட்ட பாரதி(தீ)யே..!
அழியாது உன்தாக்கம்
அதுவேயென் உத்வேகம்..!
என்றும் உன்வழி(லி)யுடன்.....
ஜாக் ஜெ ஜீ..

