பாரதி நின் போலும் நான் எங்கனும் கண்டதில்லை
காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டாய்
காற்று வெளியினில் காதலை எண்ணிக் களித்தாய்
சீற்றத்திலே ஓங்கி முரசு கொட்டினாய்
சொல்லடி சிவசக்தி என்று உணர்ச்சியில் அன்னையை விளித்தாய்
வறுமை ஒழிந்திடவே வாழும் மனிதர்க்கு சோறிடச் சொன்னாய்
அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டலிலும் சாலச் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவித்தல் என்றாய்
ரௌத்திரம் பழக்கச் சொன்னாய் ரஜசம் வளர்க்கச் சொன்னாய்
சரித்திரம் படைக்கச் சொன்னாய் !
அக்கினி குஞ்சினை காட்டிடை பொந்திடை வைத்து
தழல் வீரத்துடன் தத்த தறிகிட தத்த தறிகிட என நர்த்தனம் புரிந்தாய்
பாரதி நின் போலும் ஓர் கவிஞனை நான் எங்கனும் கண்டதில்லை !