மீனவர்களின் மீளாத்துயரம் ஓகிப்புயல்
பிண ஊர்வலம்
வழக்கமாக
மண்மேல்தான் செல்லும்
ஏ ஓகிப்புயலே
உன்னால்
உன் அசுர ஆட்டத்தால்
நீ காட்டிய கோரத்தால்
எங்கள் மீனவர்களின் உடல்கள்
உயிர் அற்ற பிணங்களாய்
கடல்மேல் செல்கிறது
அவர்களை தூக்கிச் சுமக்கவேண்டிய நண்பர்களையும் உறவினர்களையும் தங்களுடனேயே அழைத்துச் செல்கிறது
கடல் அலைகளில் மிதந்தபடி
பல லட்சிய கனவுகளை சுமந்தபடி கடல் காற்றோடு
அவர்களின்
சுவாசக்காற்றும் கலந்திருக்கும்
கடல் அலைகளோடு
அவர்களின்
ஒளிச்சத்தமும் நிறைந்திருக்கும்
தற்போது
கடலின் உப்பளவும்
இருமடங்காய் உயர்ந்திருக்கும் இறந்தவர்களின் கண்ணீராலும் அவர்களை
இழந்து வாடும்
நல்லுள்ளங்களின் கண்ணீராலும் இயற்கைத்தாயே
இனியாவது
எங்களை பழிக்காதே
அவ்வாறு பழித்தால்
உன்னை வணங்கவோ
ரசிக்கவோ
ஒரு உயிரும் இருக்காதே...