இப்படி வாழனும்
உயர்ந்த பதவியாயினும்;
செல்வம் தன்னைத் தேடி
வந்தப் போதிலும்;
மக்கள் நலனை மட்டும் பெரிதென எண்ணி வாழ்ந்த , அந்த
உத்தம தலைவன் காமராசரைப் போல வாழ வேண்டும்.....
எளிமையாக!!!
பட்டினி கிடந்தாலும்;
பசியால் வருந்தினாலும்;
இறுதி மூச்சு வரை
தாய் தமிழுக்காக , வாழ்வேன் என்று
அவ்வாறே வாழ்ந்து மடிந்த
மகாகவி பாரதியைப் போல
வாழ வேண்டும்.....
தமிழுக்காக!!!!
இறுதி வரை தன் வாழ்நாளை
சமூக சேவைக்காக அர்ப்பணித்த
உலக தாயவள்,
அன்னை தெரசாவைப் போல
வாழ வேண்டும்......
அனைவருக்கும் நல்ல தாயாக!!!
யார் என்னை மிதித்தாலும்;
வருத்தினாலும்...அவர்களைத்
தாங்குவேன் என்று
தாங்கி நிற்கும் பூமாத்தேவியைப்
போல வாழவேண்டும்....
பொறுமையாக!!!!
இவர்களைப் போல
வாழ முடியாவிட்டாலும்,
தன்னைப் போல பிறர் வாழ
நினைக்கும் அளவிற்காவது
வாழவேண்டும்.....
மனிதநேயத்துடன்!!!!