உள்ளங்கள் சிதையாது --- முஹம்மத் ஸர்பான்

ஆசிட் வீச்சினால் முக அழகை இழந்த தன் காதலியை ஏமாற்றாமல் உண்மையான அன்பால் மணமுடித்த ஒரு காதலனின் மனதில் உள்ள எண்ணங்களை கற்பனையாக எழுதியது


அன்று நீ,

பூக்களின் அரசாங்கம்
காற்றாக நுழைந்தேன்
கனவுகளின் மூங்கில்கள்
இசையாக மாறினேன்
சந்திரனின் ஆலாபனை
பனியாக உறைந்தேன்
ரகசியமான கடிதங்கள்
உதடுகளில் பிறந்தேன்
அருவிகளின் பாதைகள்
மீன்களாய் நீந்தினேன்

இன்று நீ,

புன்னகை இராணுவம்
போராடி வென்றேன்
அன்னையின் புனிதம்
கடனினை தீர்த்தேன்
அறையின் கதவுகள்
காவல்கள் புரிந்தேன்
குழந்தையின் சாயல்
தாலாட்டுப் பாடினேன்
நினைவுகளின் யுத்தம்
முத்தங்கள் கேட்டேன்

அன்றும் இன்றும் நீ,

உலகின் பொழுதுகள்
கருவின் உதயங்கள்
ஜீவனின் மீள்பிறப்பு
அன்புள்ள தாய் மடி
இரவுகளின் ஒளிமயம்
கனவுகளின் முதற்கரு
காதுகளுடன் மட்டும்
பேசும் மூச்சுக் காற்று
சிலுவைகள் ஏந்திடும்
பாதையின் முடிவிடம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Dec-17, 5:26 pm)
பார்வை : 187

மேலே