குருவே சரணம்

குருவே சரணம்

முதல் வகுப்பில் என்னை ஓட ஓட விரட்டி பயிற்றுவித்த ஆசானே
பள்ளியில் அம்மா என்று போது நான் உன் ஆசிரியை என்று கண்டித்த அம்மாவே

பதுப்பள்ளியில் திண்டாடிய போது என்னை திடப்படுத்திய ஆசானே
உன்னால் முடியும் என்று என்னை உயர்த்தி கைதூக்கிவிட்ட ஆசானே

தமிழால் நீ என்றும் வாழ்வாய், உவகை கொள்வாய் என்று முன்மொழிந்த ஆசிரியரே
விளையாட்டு,சாரணர்,தேசிய சேவையை வளர்த்த ஆசிரியர்களே

உன் இயலாமையை சீர் செய்தால் சிறப்பாய் வாழலாம் என ஊக்கமுட்டிய ஆசானே
உன்னால், உன்னால் மட்டுமே முடியும் என என்னை உற்சாகப்படுததிய குருவே

விடாமுயற்சி இருந்தால் தேர்வு பெறலாம் என ஊக்கமுட்டிய ஆசானே
பொறியியல் கணிதத்தை கதைகளால் எளிதாக கற்றுக்கொடுத்த ஆசிரியரே

ஒழுக்கமும், காலந்தவறாமையும் இன்றியமையாதது என வலியுறுத்திய ஜெனரலே
அனபும் ஆதரவும் காட்டி என் முதுகலைப் படிப்பிற்கு உறுதுணயாய் இருந்த குருவே

மற்றும் என் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த அனைத்து ஆசான்களுக்கும்
என் உளங்கனிந்த நன்றி
ராரே

எழுதியவர் : ராரே (13-Dec-17, 6:10 pm)
Tanglish : GURUVE saranam
பார்வை : 2189

மேலே