விளிம்பில் என் காதல்

கடலில் வரும் அலையை போல

கரையில் கிடந்து விடுமோ என் காதல் ,

தரையில் கிடக்கும் மீன் போல உன்னுடன்

வாழ நினைக்குதடி என் இதயம்

உன் பார்வை பட்ட ஒரு நிமிடம்

பற்றி கொண்ட உன் நினைப்பு

சாகும் வரை மறையாது ,

செத்த பின்பும் போகாது இது

என் காதலின் தவிப்பு

எழுதியவர் : நீலகண்டன் (13-Dec-17, 10:20 pm)
பார்வை : 161

மேலே