நட்பின் அம்சம் நட்பே
இரு வேறு உருவம் தான் இருக்கும் ,,,,,
ஆனால் அதில் ஒரு பிரிவில்லா மனது இருக்கும் ,,,,,
சிறு பொழுது பிரிந்தாலும் தேடுமே கண்கள்
நண்பன் வந்திட்டாள் பூக்குமே இதழ்கள் ,,,,,
இதழ்கள் சொல்லாத பதிலையும் கண்களால்
கண்டு கொள்ள நட்பால் முடியுமே ,,,,
வழிதனிலே கடந்து சென்ற பெண்கள்
தன்னை தான் பார்த்ததாய் கூறி
நட்புக்குள் போடும் போட்டிகள் அழகுதான் ...
காதலிக்கு கிடைத்த இரண்டாம்
அண்ணன் அல்லவா நண்பன் ,,,,
சில நிமிடம் நின்று காத்திருந்து
கடுப்பாகும் காதலி அழகென்றால் ,,,,,
நண்பனுக்காய் எவனையும் எதிர்த்து நின்று
நட்பு ஒன்றை மட்டுமே எதிர் பார்க்கும் தோழன் எவ்வளவு அழகு ...
முகிலும் மழையும் நட்பிற்கு சமர்ப்பணம் ..........